Pages

Powered By Blogger

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்

நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான, அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து கேட்டுப் பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர். சிறுவர்களை அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1) Starfall: இத்தளம் இளம் சிறுவர்களுக்கானது. ஆங்கிலத்தை இரண்டரை வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள தளம். ஆங்கிலத்தை இரண்டரை வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள தளம். ஆங்கில எழுத்துக்களில் தொடங்கி அவற்றை எப்படி உச்சரிப்பது குழந்தைக்குக் கொடுத்து வாங்கிக் கற்றுக் கொடுக்கிறது. சொற்கள் புதிர், சொல் விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் கற்றுக் கொடுப்பது பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. www.starfall.com என்ற முகவரியில் இதனைக் காணலாம்.


2) Kids.gov சிறுவர்களை மனதில் கொண்டு அவர்களுக்குத் தகவல்களைத் தரும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வயது சிறுவனுக்கும் இது உகந்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்க அரசின் தளங்கள் குறித்த தகவல்கள் இருந்தாலும் இது தரும் 1200 தளங்களின் தகவல்கள் எந்த சிறுவனின் அறிவுப் பசிக்கும் தீனி போடுகிறது. டெக்னாலஜி, உடல் நலம் மற்றும் நலம் காத்தல், அறிவியல் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் உள்ளன. பள்ளிகளில் குழந்தைகளை புராஜக்ட் செய்திட வற்புறுத்தினால் இத்தளத்தில் தகவல்களைப் பெற்று திட்டங்களை வடிவமைக்கலாம். இதன் முகவரி www.kids.gov.


3) Homework Spot இந்த தளம் பள்ளிமாணவர்களின் ஹோம் ஒர்க் வேலைகளுக்கும் உதவுகிறது. அனைத்து வயது சிறுவர்களுக்கும் உகந்தது. ஆங்கிலம், மேத்ஸ், சயின்ஸ், ஆர்ட்ஸ், மியூசிக், ஹெல்த், லைப் ஸ்கில்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் என இன்னும் எவ்வளவோ பிரிவுகளில் உதவிடுகிறது. எனவே ஹோம் ஒர்க் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்த தளத்தை அணுகுமாறு குழந்தைகளை வழி நடத்தலாம். முகவரி www.homeworkspot.com


4) Family Fun குழந்தைகள் என்றாலே அங்கு வேடிக்கையும் விளையாட்டும் கட்டாயம் வேண்டும் அல்லவா! இந்த தளம் வேடிக்கை காட்டுவதோடு பள்ளிக்கூடப் பாடங்கள் சாராத சில விஷயங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்துகிறது.


எடுத்துக் காட்டாக சமைப்பதற்கு, சிறிய சுற்றுலா செல்ல எப்படி திட்டமிடுவது என்றெல்லாம் கேட்டு வழி நடத்துகிறது. சில விஷயங்களை மேற்கொள்வது எப்படி என்பதற்கு சிறு சிறு வீடியோ காட்சிகளுடன் வழி நடத்துகிறது. இத்தள முகவரி http://familyfun.go.com/recipes/kids/


5) SciVee: உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகள் சயின்ஸ் குறித்து அறிய ஆவலுடையவர்களாக இருக்கிறார்களா! அந்தப் பசிக்கு சரியான தீனி போடும் தளம் இது. அமெரிக்காவில் இயங்கும் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் ஆகியவற்றின் துணையுடன் இந்த தளம் படு பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் தாங்கள் தயாரிக்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் இதில் பதிந்து வைக்கவும் வசதி தரப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள். தள முகவரி www.scivee.tv


6) Creating Music மியூசிக்கை விரும்பாத குழந்தைகள் உண்டோ! இந்த தளம் குழந்தைகளை மியூசிக் டைரக்டர்களாக உருவாக்குகிறது. ஆம், மியூசிக்கைத் தாங்களே கம்போஸ் செய்திடும் வழி தருகிறது. வெவ்வேறு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட்களை இயக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த இன்ஸ்ட்ருமெண்ட்டைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். இத்தளத்தின் முகவரி: www.creatingmusic.com


7) KidsClick: கொஞ்சம் வளர்ந்த சிறுவர்களுக்கானது. எந்த சப்ஜெக்ட் குறித்து தகவல்கள் வேண்டுமோ அதனைத் தேடித்தரும் சர்ச் இஞ்சின் போன்ற தளம். ஏறத்தாழ 600 தளங்களிலிருந்து தகவல்களைத் தருகிறது. சிறுவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறதா! இந்த தளங்களைக் காட்டிப் பழக்குங்கள். பின் அவர்கள் தேவையற்ற டிவி சீரியல்களிலும் வீடியோ கேம்களிலும் தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். 4.ரு. இன்டர்நெட் முகவரியில் கேப்பிடல் லெட்டர்ஸ்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்


புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைபின்பற்றவேண்டும்இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம்கணிணி புதியது என்றால் பாதுகாபப்பைஇப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.


. Sequrity Update களை நிறுவுங்கள்.




உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்
தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்இது தானாகவேஇயங்குமாறு செய்யலாம்அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட பாதுகாப்பு கோப்புகளைதனியாக தரவிறக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.

இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updatesசெல்லுங்கள்அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.

கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த
பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc

சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :

Update for Windows XP (KB932823)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85

Security Update for Windows XP (KB958644)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03

Security Update for Windows XP (KB961371)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035b

Windows Malicious Software Removal Tool
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356

Malware Removal Starter Kit
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6cd853ce-f349-4a18-a14f-c99b64adfbea

மேலும் உங்களுக்கு தேவையான .Net , DirectX , Internet Explorer 8 மற்றும் விண்டோஸ்சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.

முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீது பயந்தனர்.இப்பொழுது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வைரஸ்கள் வருகின்றன.குறிப்பாக பென் டிரைவ்கள்அதனால் எதையும் சோதிக்காமல் அலட்சியமாக கோப்புகளைதிறக்காதிர்கள்.உங்கள் கணினியில் ஒரு நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருளைநிறுவுங்கள்இந்த வகையில் Avast மற்றும் Avira ஆண்டிவைரஸ்கள் இலவசமாகவேகிடைக்கின்றனகணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avastபயன்படுத்தலாம்ஆனால் Avira இயங்க குறைந்த நினைவகமே போதும்.


ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்லகண்டிப்பாக மால்வேர் (Malware )தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்க வேண்டும்.

மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .
இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.

3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.

சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும்எல்லாவற்றையும்நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள்இதை தவிர்த்துஎவை உங்களுக்கு வேண்டுமோ அதன் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமேவைத்திருக்கவும்உதாரணமாக Firefox, MS-Office போன்றவைமற்றவற்றை எல்லாம்தூக்கி கடாசி விடுங்கள்.

4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :

Ccleaner

கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள்இது ஒரு நல்லமென்பொருள்ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க ,மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாளபார்த்த கோப்புகளின்பட்டியல் , இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் அருமையானஎளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.

Advanced System Care

இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட அதிக வசதிகள்கொண்டது.அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய இந்த மென்பொருள் கணினிக்குஎந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறதுஇதில் ஸ்பைவேர் நீக்கும் வசதியும்இருக்கிறதுவைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து அடைத்துவிடும் வசதியும் உண்டு.

5. Hard Disk  படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்லஉங்கள் கணினியின் வன்தட்டில்
உள்ள தகவல்கள்அமைப்புகள்நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற
எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும்இதன் மூலம்அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்
நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன இருந்ததோ அதைமீட்டு கொள்ளலாம்மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதை மேற்கொள்ள
ஒரு இலவச மென்பொருள் உள்ளதுகீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.

DriveImage XML

6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )

பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறதுஏன் என்றால் எந்தஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது வைரஸ்கள் வந்தாலோ அதைவாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றனஇதனால் உங்களின் Firewall அமைப்பை இயக்கநிலையில் வைத்திருக்கவும்.


இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள்அதில் on என்பதை தேர்வுசெய்யுங்கள்.நீங்கள் இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால்பயன்படுத்தலாம்Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும்பயர்வால் அளிக்கிறது.
இதை தரவிறக்க : Zone Alarm Firewall.

மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து செய்துஎன்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றனஇதனால்வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம்மேலும் தற்போதுஇயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.

இதை தரவிறக்க : Winpatrol
 

Thanking You
http://ponmalars.blogspot.com
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments