Pages

Powered By Blogger

காதல்♥கவிதை♥

நள்ளிரவு தாண்டிய
சாமத்தின்  சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது... ♥


பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்..♥


அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட
உதிர்க்கவில்லை இன்னமும்..♥


அவள்  இன்று  கல்லறையில்
வைத்த  பூவை
அன்று  அவன்
கையில்கொடுத்திருந்தால்
அவன்  சில  காலம்
உயிர் வாழ்ந்திருப்பான் ...♥

பார்வையாலே    கொலை  செய்து  
விட்டுப்  போகிறாய் -நீ 
உன்  நினைவுகளால் 
உயிர் பிரிகின்றேன் -நான்...♥  


நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்பார்த்ததும்
எனக்கும் செத்துவிடத் தோன்றியது....♥


என் நாட்குறிப்பின்
பக்கங்களிலிருந்து
கிழித்தெறிகிறேன்..!
உன்னுடன்பேசாத நாட்களை..!♥


புகையிரதவண்டியில் நீயோ
சுகமான பயணம் 
உனக்காக நீட்டிய ரோஜாவோ
தண்டவாளத்தில்....♥

எழுத எழுத   வெறுமையாகவே
இருக்கிறது-தாள் 
எழுதியதுமே   தாளிடமிருந்து  
தப்பித்து உன்னை சேரும்
எனது காதல் கவிதை....♥  ♥ ♥
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to "காதல்♥கவிதை♥"

Post a Comment