Pages
பிரிண்டரைப் பங்கிட்டுப் பயன்படுத்த ! ! !
Posted in
Labels:
மென்பொருள்
|
at
1:11 PM

கம்ப்யூட்டர் ஒன்றுடன் இணைக்கப்படும் சாதனங்களில், பகிர்ந்து பயன் படுத்தக் கூடிய சாதனங்களில் பிரிண்டரும் ஒன்று. நம் அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இது நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டருக் கும் ஒரு பிரிண்டர் இணைப்பது தேவையற்ற ஒன்று. இந்தச் சூழ்நிலையில் பணியாற்றும் அனைவருக்கும் இது உபயோகமாக இருக்கும், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்துப் பல சந்தேகங்கள் மற்றும் பொதுவான சில குறிப்புகள் இங்கு அவர்களுக்கு உதவும் வகையில் தரப்படுள்ளது.
பைல் மற்றும் பிரிண்டரை பங்கிட:
நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டரில் தான் பிரிண்டர் நிறுவப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்கள் பிரிண்டரை மற்றவர்கள் பயன்படுத்தலாம் என்று பெருந்தன்மையுடன் நீங்கள் நினைத்தால் அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.
அனுமதி வழங்க Start-Settings-Control-Panel கட்டளையைக் கொடுங்கள். அங்குள்ள Network ஐகானை டபுள்-கிளிக் செய்யுங்கள். கிடைக்கின்ற டயலாக் பாக்ஸில் Configuration என்ற டேபிளைத் தேர்வு செய்து அதிலுள்ள File and Print Sharing பட்டனை அழுத்துங் கள். இரு செக் பாக்ஸ்கள் தெரியும். அவற்றுள் உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து OK செய்யுங்கள்.
நெட்வொர்க் பிரிண்டருக்கான ஐகானை ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் கொண்டு வர:
நெட்வொர்க்கில் உள்ள ஒருவர் எந்தக் கம்ப்யூட்டரில் இருந்து கொண்டும் பிரிண்டரை அடைய வேண்டுமெனில் அந்த பிரிண்டருக்கான ஐகானை ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் நிறுவ வேண்டும். அந்த பிரிண்டருக்கான டிரைவர் சிடி மற்றும் சிஸ்டம் சிடி டிஸ்க்குகளை கையில் வைத்துக் கொள்ளுங்கள். பிரிண்டருக்கான டிரைவரை நிறுவ அவை தேவைப்படும்.
Start Settings Printers கட்டளையைக் கொடுங்கள். Add Printer என்ற ஐகானை டபுள்-கிளிக் செய்தால் விஸார்டு ஒன்று கிடைக்கும். அது கூறுகிறபடி செயல்பட வேண்டும். Local Printer என்பதற்குப் பதில் Network Printer என்பதைத் தேர்வு செய்து, நெட்வொர்க் கில் உள்ள பிரிண்டரைத் தேர்வு செய்ய வேண்டும்.
சோதனைக்காக ஒரு பக்கத்தை அச்சடிக்கும்படி விஸார்டிடம் கூறுவது நல்லது. இதனால் பிரிண்டர் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நெட்வொர்க் பிரிண்டரை மாறா நிலை (Default) பிரிண்டராக மாற்ற:
நெட்வொர்க்கில் உள்ள பிரிண்டர் போக உங்கள் கம்ப்யூட்டரில் வேறு ஏதாவது பிரிண்டர் நிறுவப்பட்டிருந்தால் இந்த இரண்டு பிரிண்டர்களிலும் நீங்கள் அச்சடிக்க முடியும். அச்சடிக்கும் பொழுது கிடைக்கிற பிரிண்ட் டயலாக் பாக்ஸில் வேண்டிய பிரிண்டரை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
இரண்டு பிரிண்டர்களில் ஒன்றை மாறாநிலையில் இயல்பு ( Default ) பிரிண்டராக மாற்றினால் என்ன ஆதாயம்? நீங்கள் அச்சடிக்கக் கட்டளை கொடுத்து, பிரிண்டரை தேர்வு செய்யாமல் விட்டால் அந்த மாறாநிலை பிரிண்டரில் அச்சாகும். எனவே நாம் தேர்வு செய்கிற வேலை மிச்சம்.
Start-Setting-Printers கட்டளையைக் கொடுங்கள். உங்களது இரு பிரிண்டர்களுக்கான ஐகான்கள் அங்கு தெரியும். எந்த பிரிண்டரை மாறாநிலை பிரிண்டராக மாற்ற விரும்பு கிறீர்களோ அதன் ஐகானை ரைட்-கிளிக் செய்து Set as Default கட்டளையைக் கொடுங்கள்.
லோக்கல் பிரிண்டரை மற்றவர்கள் பயன்படுத்த:
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரிண்டரை நெட்வொர்க்கில் உள்ளவர் கள் பயன்படுத்தும் படி செய்ய முடியும்.
Start-Settings-Printers கட்டளையைக் கொடுங்கள். பங்கிட விரும்புகிற பிரிண்டரின் ஐகானை ரைட்-கிளிக் செய்து Sharing என்ற கட்டளையைக் கிளிக் செய்யுங்கள். அந்த பிரிண்டருக்கான பெயரை Share Name என்ற இடத்தில் டைப் செய்யுங்கள்.
குறிப்பிட்டவர்கள் தவிர மற்றவர்கள் உங்கள் பிரிண்டரைப் பயன்படுத்தக் கூடாது; பாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அதற்கும் வழியுண்டு. முந்தையப் பத்தியில் பார்த்த Share Name என்பதற்கு அடியில் Password என்ற இடத்தில் பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள்.
நீங்கள் அச்சடிக்கும் வேலையை விலக்கிக் கொள்ள:
நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு அச்சடிக்கக் கட்டளை கொடுத்தால் அந்த அச்சு வேலை நெட்வொர்க் பிரிண்டரில் அல்லவா அச்சாகும்? அச்சடிக்கக் கட்டளை கொடுத்த பின்பு அதை விலக்க பிரிண்டர் இருக்கிற கம்ப்யூட்டருக்கு நீங்கள் ஓட வேண்டாம்.
அச்சை விலக்கிக் கொள்ள மட்டுமல்ல, இப்பொழுது அச்சு வேண்டாம், சற்று நேரம் நிறுத்தி வைப்போம் என நீங்கள் நினைக்கிற அச்சு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தவும் முடியும். உங்கள் கம்ப்யூட்டரில் கீழ் - வலது கோடியில் உள்ள சிஸ்டம் டிரேயில் பிரிண்டருக்கான ஐகான் இருக்கும். அதை ரைட்-கிளிக் செய்தால் Pause, Delete போன்று கட்டளைகள் காணப்படும். வேண்டியதைச் செயல் படுத்தினால் அதற்கேற்ப அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "பிரிண்டரைப் பங்கிட்டுப் பயன்படுத்த ! ! !"
Post a Comment