Pages
நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன்
Posted in
Labels:
மொபைல்
|
at
4:30 PM

மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான்.
இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.
XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் SpareOne என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒருமுறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.

இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேசமுடியும். போனை பாவிக்காது வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.
இத் தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும்.
ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம்.
இக் கைபேசியின் விலை வெறும் 50 டொலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது SpareOne.

தல அஜித் இன் வரலாற்று அரிய புகைப்பட பதிவு: சிறுவயது முதலான புகைப்படங்கள் இணைப்பு
Posted in |
at
12:00 AM
இன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்
Posted in
Labels:
செய்திகள்,
தொழில்நுட்பம்
|
at
4:07 PM
இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.1969: ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.
1972
ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.
1973
ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.
1974
டி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது.
1983
டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து “.com, .edu .gov” என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.
1988
Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.
1989
இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.
1990
நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.
1993
இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.
1994
ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.
1995
அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.
1996
ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.
1998
ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporationfor Assigned Names and Numbers அல்லது ICANN என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.
1999
இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.
2000
1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.
2002
உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.
2004: ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerbergஎன்பவர் பேஸ்புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார்.
2005
வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.
2006
இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.
2007
ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.
2008
இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.
2009
முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.

வாகனங்களுக்கு எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பினால் சரியானது?
Posted in
Labels:
செய்திகள்
|
at
4:52 PM
வாகனங்களுக்கு
பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர்
ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள். பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது.
எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி
சரியானதாக இருக்கும்.
பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.
மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.
அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.
-------------------------------------------------------------பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.
மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.
அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.
புதிய மின்னஞ்சல்கள் வந்ததா என்று எஸ்.எம்.எஸ் -ஸில் அறிய
Posted in
Labels:
மொபைல்
|
at
1:19 PM

தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது . அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் . அதற்கு தான் இந்த தளம்நமக்கு உதவுகிறது .இது ஒரு அருமையான தளம் . நமக்கு வரும் புதுபுது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப் படுத்துகிறது . இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் இது நன்றாக செயல் படுகிறது .
பெயர் ,பாலினம் ,மின்னஞ்சல் ,தொழில் ,மாநிலம் ,மொபைல் நம்பர்,கடைசியாக உங்கள் city name ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள் .
பதிவு செய்து முடித்தவுடனே உங்கள் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .
அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் . அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்
011-47606762 Or Mail us on support@site2sms.com
2.பின் டாஸ் போர்டு -க்கு செல்லுங்கள் . settings page-க்கு செல்லுங்கள் .
3.அந்த பக்கத்தில் எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ். வர வேண்டும் என்று கொடுத்து விடுங்கள் .
4.eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள் .
5.அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டு வந்து சில மாற்றங்கள் செய்ய வேண்டும் .

login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP "
forward a copy of incoming mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை (123456789012@site2sms.com) கொடுக்கவும் .
உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மெயில் -ஐ கன்பார்ம் செய்து கொள்ளுங்கள் .
இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் மொபைலுக்கும் வரும் .
நன்றி ...

Fileகள், Folderகள், Drive களுக்கான Icon களை விருப்பம்போல மாற்றலாம்
Posted in
Labels:
மென்பொருள்
|
at
8:38 AM
நீங்கள் அன்றாடம் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கையில் ஒரே மாதிரியான Fileகளையும், Folderகளையும், Driveகளையும் பார்த்து சலித்திருக்கலாம். இவற்றை எமது விருப்பம் போல வித்தியாசமான Icon களையோ அல்லது நீங்களே உருவாக்கிய உங்கள் படங்களையும் Icon களாக அமைத்திடலாம். இந்த மென்பொருள்மூலம் [IconTweaker] இலகுவான முறையில் Icon களை மாற்றும்விதமாக Themes என்ற பகுதியில் பல விதமான Icon கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைவிட Icons என்ற பகுதியில் எமது விருப்பத்திற்கேற்ப வேறு Icon களையோ அல்லது நாமே உருவாக்கிய Icon களையோ அமைத்திடலாம்.
இலகுவாக Icon களை மாற்றுவதற்கமைய Network Icon கள், கர்சர்கள், ஃபோல்டர்கள், டிரைவ்கள், ஃபைல்கள், டெஸ்டொப் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருள் மூலம் தற்போதுள்ள Iconகளுக்கான மாற்றங்களை சேவ்செய்து பாதுகாக்கும் வசதியும் உள்ளமை சிறப்பு ஆகும்.
மென்பொருளை டவுண்லோட் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி
Posted in
Labels:
மென்பொருள்
|
at
5:00 PM
கணணிப் பயன்பாட்டாளர்களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலைஉருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான்அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய்விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில்
இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.
இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன்
சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த
வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.
அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ?
ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen driveவின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க
முடியும்.
செயற்படுத்தும் முறை
முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe
Pen drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .
அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும்.
( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை
மாற்றலாம் )
அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.
பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.
அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும்அந்தPassword போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.
இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.
மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/
ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய
Posted in
Labels:
மென்பொருள்
|
at
4:15 PM

அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.
இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.
இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.

இது விண்டோஸ் 2000/2003/XP/Vista/7 இயங்குதளங்களில் இயங்கும். இதன் மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ள போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அழித்து கணினியின் ஹார்ட்டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)