Pages
PDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்
Posted in
Labels:
தொழில்நுட்பம்
|
at
6:05 PM
டாக்குமெண்ட்களை பறிமாறிக்கொள்ள தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் பார்மெட்களில் pdf பார்மெட்டும் ஒன்றாகும். இந்த pdf பைல் பார்மெட் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில கணினிகளில் pdf ரீடர் இருக்காது. அதுபோன்ற கணினிகளில் pdf பைல்களை நம்மால் காண இயலாது. pdf டாக்குமெண்டில் உள்ள தகவல்களை காண நாம் அந்த பைல்களை வேறு ஒரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும். வேர்ட் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல வழிகள் உள்ளன. பிடிஎப் பைல்களை வேர்ட் பார்மெட்டாக கன்வெர்ட் செய்யும் போது பல பிரச்சினைகள் உள்ளன. தமிழ் எழுத்துரு பிரச்சினை வரக்கூடும். இதனால் நம்மால் டாக்குமெண்ட்களை முழுமையாக காண முடியாது. இந்த pdf பைல்களை நாம் இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்யும் போது எந்த வித பார்மெட்டும் மாறாது. இவ்வாறு pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல வழிகள் உள்ளன. நாம் ஆன்லைனில் இருந்தவாறே பைல்களை கன்வெர்ட் செய்ய முடியும். ஆனால் இணைய இணைப்பு இல்லாத கணினிகளில் pdf பைல்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் மென்பொருளின் உதவியை நாட வேண்டும். pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் PDF To JPG.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "PDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்"
Post a Comment