Pages
M.G.R.- அறிந்ததும் அறியாததும்
Posted in
Labels:
தமிழகம்
|
at
12:44 PM
ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார்
பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா
முதல் படம்: சதிலீலாவதி (1935)
கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978
முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி
இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன்
இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் இயக்கிய படங்கள்
நாடோடி மன்னன் 1958
உலகம் சுற்றும் வாலிபன் 1973
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1977
அரசியல் வாழ்க்கை
காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்வை துவங்கிய இவர் கலைஞரின் உதவியுடன் தி.மு.க-வில் இணைந்தார்.அண்ணாவின் மறைவிற்கு பின் கலைஞர் முதல்வராக பெரிதும் உதவியாக இருந்தார். பின்னர் கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 1973- ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க-வை துவக்கினார். இவர் சந்தித்த முதல் இடைத்தேர்தல் திண்டுக்கல் நாடாளு மன்ற தேர்தல். அந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை அண்ணா.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் தோற்கடித்தார்.
போட்டியிட்ட இடங்கள்
தி.மு.க-சார்பில் 1967,1971-ஆம் ஆண்டு பரங்கிமலை தொகுதியிலிருந்தும்,
அண்ணா.தி.மு.க- சார்பில் 1977- ஆம் ஆண்டு அருப்புக்கோட்டைதொகுதியிலிருந்தும்,
1980-ஆம் ஆண்டு மதுரை மேற்கிலிருந்தும்,
1984-ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்தும் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்க பட்டார்.
1977-ஆண்டிலிருந்து 1987-ஆம் ஆண்டு வரை மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவரின் மனைவியர் பெயர்கள்
தங்கமணிசதானந்தவதி,
ஜானகி அம்மாள்
இவருக்கு புரட்சி நடிகர் பட்டத்தை வழங்கியவர் கலைஞர்
புரட்சித்தலைவர் பட்டத்தை வழங்கியவர் கே.ஏ. கிருஷ்ணசாமி
எம்.ஜி.யாரின் அபூர்வ புகைப்படங்கள் கீழே....
பேரறிஞர் அண்ணா,பேராசிரியர் க.அன்பழகனுடன்
சில அபூர்வமானபுகைப்படங்களின் தொகுப்பு
எம்.ஆர்-ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருக்கும் எம்.ஜி.ஆரிடம் பரங்கிமலை தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்து வாங்கப்படுகிறது.
கே.எ.மதியழகன், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் கருணாநிதியுடன்
தன் நண்பர் கலைஞருடன் ஒரு இனிய தருணத்தில்
தன் மனைவி வி.என். ஜானகியுடன்
சிவாஜி, கலைஞர், ஜெயலலிதாவுடன்
எம்.ஜி.யாருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது
Subscribe to:
Post Comments (Atom)
























0 Response to "M.G.R.- அறிந்ததும் அறியாததும்"
Post a Comment