Pages

Powered By Blogger

ட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDrivers


விண்டோஸ்ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே அதனுடன் சேர்த்து ட்ரைவர்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சவுண்ட், வீடியோ, ஈதர்நெட் என அனைத்துக்கும் தனித்தனியாக ட்ரைவர்களை நிறுவ வேண்டும். அதுவும் ட்ரைவர் பேக்அப் இல்லாமல் ஒரு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய பிறகு அந்த கணினிக்கு தேவையான ட்ரைவரை இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் பெரும் அவஷ்த்தைதான். புதிதாக இணையத்தில் இதற்கான ட்ரைவரை தேடிப்பிடித்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் நம்முடைய நண்பர்களிடம் இருக்கும் ட்ரைவர் சீடியை வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இது சில நேரங்களில் காலை வாரிவிடும். குறிப்பிட்ட ட்ரைவர் மட்டும் நமக்கு கிடைக்காது. இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி ஸ்கேன் செய்யவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கணினியானது சோதிக்கப்பட்டு குறிப்பிட்ட ட்ரைவர் அப்டேட் காண்பிக்கப்படும். வேண்டிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ளவும்.



இந்த மென்பொருளின் உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


இப்போது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள ட்ரைவர்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

Thaking You
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்


புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைபின்பற்றவேண்டும்இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம்கணிணி புதியது என்றால் பாதுகாபப்பைஇப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.


. Sequrity Update களை நிறுவுங்கள்.







உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்

தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்இது தானாகவேஇயங்குமாறு செய்யலாம்அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட பாதுகாப்பு கோப்புகளைதனியாக தரவிறக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.



இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updatesசெல்லுங்கள்அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.



கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த

பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc


சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :


Update for Windows XP (KB932823)

http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85


Security Update for Windows XP (KB958644)

http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03


Security Update for Windows XP (KB961371)

http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035b


Windows Malicious Software Removal Tool

http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356


Malware Removal Starter Kit

http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6cd853ce-f349-4a18-a14f-c99b64adfbea


மேலும் உங்களுக்கு தேவையான .Net , DirectX , Internet Explorer 8 மற்றும் விண்டோஸ்சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.



2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.



முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீது பயந்தனர்.இப்பொழுது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வைரஸ்கள் வருகின்றன.குறிப்பாக பென் டிரைவ்கள்அதனால் எதையும் சோதிக்காமல் அலட்சியமாக கோப்புகளைதிறக்காதிர்கள்.உங்கள் கணினியில் ஒரு நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருளைநிறுவுங்கள்இந்த வகையில் Avast மற்றும் Avira ஆண்டிவைரஸ்கள் இலவசமாகவேகிடைக்கின்றனகணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avastபயன்படுத்தலாம்ஆனால் Avira இயங்க குறைந்த நினைவகமே போதும்.





ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்லகண்டிப்பாக மால்வேர் (Malware )தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்க வேண்டும்.



மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .

இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.



3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.



சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும்எல்லாவற்றையும்நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள்இதை தவிர்த்துஎவை உங்களுக்கு வேண்டுமோ அதன் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமேவைத்திருக்கவும்உதாரணமாக Firefox, MS-Office போன்றவைமற்றவற்றை எல்லாம்தூக்கி கடாசி விடுங்கள்.



4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :



Ccleaner


கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள்இது ஒரு நல்லமென்பொருள்ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க ,மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாளபார்த்த கோப்புகளின்பட்டியல் , இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் அருமையானஎளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.



Advanced System Care


இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட அதிக வசதிகள்கொண்டது.அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய இந்த மென்பொருள் கணினிக்குஎந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறதுஇதில் ஸ்பைவேர் நீக்கும் வசதியும்இருக்கிறதுவைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து அடைத்துவிடும் வசதியும் உண்டு.



5. Hard Disk  படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.



படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்லஉங்கள் கணினியின் வன்தட்டில்

உள்ள தகவல்கள்அமைப்புகள்நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற

எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும்இதன் மூலம்அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்

நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன இருந்ததோ அதைமீட்டு கொள்ளலாம்மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதை மேற்கொள்ள

ஒரு இலவச மென்பொருள் உள்ளதுகீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.



DriveImage XML


6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )



பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறதுஏன் என்றால் எந்தஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது வைரஸ்கள் வந்தாலோ அதைவாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றனஇதனால் உங்களின் Firewall அமைப்பை இயக்கநிலையில் வைத்திருக்கவும்.





இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள்அதில் on என்பதை தேர்வுசெய்யுங்கள்.நீங்கள் இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால்பயன்படுத்தலாம்Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும்பயர்வால் அளிக்கிறது.

இதை தரவிறக்க : Zone Alarm Firewall.


மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து செய்துஎன்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றனஇதனால்வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம்மேலும் தற்போதுஇயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.



இதை தரவிறக்க : Winpatrol
 

Thanking You
http://ponmalars.blogspot.com
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments