Pages

Powered By Blogger

அடம் பிடிக்கும் பைல்களை அழிக்க

சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.

Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது –– என்று பலவகையில் செய்திகள் கிடைக்கலாம். அழிக்க மறுக்கையில் மட்டுமின்றி, பைலுக்கு வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும்.
இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்த செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது
File Assassin என்னும் புரோகிராம். இதனை http://www.malwarebytes.org/fileassassin.php என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

இந்த பைலை இலவசமாக இணைய தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், File Assassin புரோகிராமை, அந்த பைலின் பெயர் அல்லது போல்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். அப்போது பைலை அல்லது போல்டரை அழிக்க விடாமல் தடுக்கும் லாக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் File Assassin என்பதில் கிளிக் செய்தால், அனைத்து லாக்கர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பைல் அழிக்கப்படும். அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழி கிடைக்கும்.

அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதனை உணரலாம். அன்லாக்கர் தரும் அனைத்து வசதிகளையும் தரும் புரோகிராம்கள் எதுவும் இந்த புரோகிராம்களில் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு வசதி குறைவாகவே உள்ளது. மற்ற புரோகிராம்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1. ப்ராசஸ் எக்ஸ்புளோரர் (Process Explorer): இதனைப் பெற
sysinternals.com/ntw2k/freeware/procexp.shtml

2.பைல் அசாசின் (File Assassin): தளம் – malwarebytes.org/fileassassin.php

3.ஹூ லாக் மி (Who Lock Me) -: தளம் dr-hoiby.com/WhoLockMe/index.ph


Thank You







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to "அடம் பிடிக்கும் பைல்களை அழிக்க"

Post a Comment