Pages
இந்திய அம்மாவா சும்மாவா?
Posted in
Labels:
நகைச்சுவை
|
at
12:18 PM
குமாரை பார்க்க ஊரிலிருந்து அவனது அம்மா வந்திருந்தார். குமாரின் ரூம்மேட் ஒரு பெண், பெயர் ரம்யா.
ரம்யாவின் கைவண்ணத்தில் அம்மாவுக்கு இரவு விருந்து தயாரானது. சாப்பிடும்போது, குமாரின் அம்மா, 'இந்த ரம்யா இவ்வளவு அழகாக இருக்கிறாளே, குமாருக்கும் இவளுக்கும் இடையே ரூம்மேட் தாண்டிய உறவு இருக்குமோ?' என்று எண்ணினாள். இந்த சந்தேகம் அவளுக்கு கொஞ்ச காலமாகவே இருந்து வந்தது. இப்போது, குமார்-ரம்யா இடையே ஆன நெருக்கமும் அவர்களது நடவடிக்கைகளும், அம்மாவின் சந்தேகத்தை அதிகப்படுத்தின!
அம்மாவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட குமார், "அம்மா, நீங்கள் நினைப்பது போல இல்லை, நானும் ரம்யாவும் வெறும் ரூம்மேட்ஸ் தான்" என்றான்!
அம்மா ஊருக்குச் சென்று ஒரு வாரம் கழித்து, ரம்யா குமாரிடம், "உங்கள் அம்மாவுக்கு விருந்தளித்த நாளிலிருந்து, வீட்டில் இருந்த எனது வெள்ளித் தட்டைக் காணவில்லை. உங்கம்மா எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை தானே?!?" என்று கேட்டாள். குமார்,"இருக்காது, எதற்கும் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி விசாரிக்கிறேன்!" என்றான்.
குமார் சாமர்த்தியமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு இப்படி எழுதினான்:
அன்பான அம்மா,
நலம் நலமறிய ஆவல். நீங்கள் இந்த வீட்டிலிருந்து ஒரு வெள்ளித்தட்டை எடுத்துச் சென்றீர்கள் என்று சொல்ல வரவில்லை. அது போல, நீங்கள் அதை எடுத்துச் செல்லவில்லை என்றும் என்னால் கூற முடியவில்லை. விஷயம் என்னவென்றால், நீங்கள் இங்கு விருந்து சாப்பிட்டுச் சென்றதிலிருந்து அந்தத் தட்டைக் காணவில்லை!
--- குமார்
ஒரு பத்து நாட்கள் கழிந்தபின், அம்மாவிடமிருந்து பதில் கடிதம் வந்தது:
அன்புள்ள குமார்,
நலம் நலமறிய ஆவல். நீயும் ரம்யாவும் ஒரே படுக்கையில் உறங்குவதாக நான் சொல்ல வரவில்லை, அதே நேரம், நீயும் அவளும் ஒரே படுக்கையில் உறங்குவதில்லை என்றும் என்னால் கூற முடியவில்லை!
விஷயம் என்னவென்றால், ரம்யா அவளது படுக்கையில் உறங்குபவளாக இருந்தால், இந்நேரம் அந்த வெள்ளித் தட்டை கண்டு பிடித்திருப்பாள், அவளது படுக்கையில் தலையணைக்கு அடியில் !?!?
இப்படிக்கு
அன்புள்ள அம்மா
கதையின் நீதி:
அம்மாவிடம் பொய்மை கூடாது, அதுவும் இந்திய அம்மாவிடம் கூடவே கூடாது :-)
Thanking You
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "இந்திய அம்மாவா சும்மாவா?"
Post a Comment